Tuesday, 25 June 2013

உனக்கு பிடித்ததாய்

ஏதும் வாங்க

கடைதெருவிற்குச் சென்றேன் !

சுற்றித்திரிந்து எதுவும் !

வாங்காமல் திரும்பினேன்

என்னை விட உனக்கு

பிடித்ததாய் ஏதுமில்லை என்பதால் !

Saturday, 22 June 2013

குப்பைத்தொட்டிக் குழந்தை

முட்டிக் கொண்ட முத்தத்தில்

எட்டி பார்த்த மழலை நான் !

கட்டிக்கொண்டு இருந்ததால்

கருவில் முளைத்த சிலை நான்!

உன்னை கருவில் உதைத்ததாளோ

என்னை உதறி தள்ளிவிட்டாயோ !

கருவில் என்னை சுமந்த தாயே

கருணை இல்லத்திலாவது விட்டிருக்கலாம் !

குப்பைத்தொட்டியில் கொட்டிவிடாயே !

பார்த்துச் செல்வோரெல்லாம்

பாலூட்ட வரவில்லையே ! ஏசிச் செல்கிறார்களே !

என் தாயே உன்னை ! என்ன செய்வேன் !

இப்படியே அலறித் துடித்தால்

இறந்துவிடுவேனம்மா இரண்டு நிமிடத்தில் !

இருள்சூழ்கிறது தாயே

இப்போதே வந்துவிடு !


Wednesday, 19 June 2013

உன்னை காதலிக்கும் வரை

 தெரியாது

காதல் எவ்வளவு

அற்புதமானதென்று !!!

உன் அருகாமை இருக்கும்வரை

தெரியாது

தனிமை எவ்வளவு

கொடுமையானதென்று !!!!!

Monday, 17 June 2013

வேகமாய் பெய்த

மழைத்துளிகளை

தாங்காமல் வளைந்து

நிற்கும் இலை போல !

காலையில் கலைந்த  தலையுடன்

சமையலறை வந்து

நின்ற கணவனை

குக்கர் விசில்

கவனம் கலைத்தும்

ரசிப்பதை நிறுத்த முடியவில்லை !!!!

Sunday, 16 June 2013

ஹைக்கூ

காற்றே உனக்கு 


ஈரச்சேலை 

கட்டிவிட்டது

 யாரோ ? 

நீ இல்லாத நான்

உன் இல்லாள்

 நீ இல்லாமல் தனியாள் !


பெரு நகரத்தில் வசிக்கிறேன்

 நீ இல்லாமல்

பெரும் நரகத்தில் வசிக்கிறேன் !


குழந்தைபோல் எழுந்தவுடன் 

வருவாய் என்னை தேடி 

உறங்கும்போது முத்தமிடுவாய் 

தாயாய்        மாறி 


ஒரு நாளும் சண்டையுடன்

உறங்கியதில்லை  

இப்போதெல்லாம்

ஒருநாள்கூட உன் சட்டை 

இல்லாமல் உறங்குவதில்லை 


கிரிக்கெட்டை ஒளிக்கவிட்டு

சமைக்கிறேன் உள்ளிருந்து 

நிலாச்சோற்றை நம்பும் பிள்ளைபோல்

 நீ இருக்கிறாய் என்று !


விஜயம் செய்ய முடியாததால் 

வீடியோவில் வருகிறாயா? 

உன்னை காணமுடிகிறதேன்று

தொழில்நுட்பத்தை போற்றுவதா ? 

அயல்நாடு அனுப்பிய 

தொழில்நுட்பத்தை சாடுவதா ? 


 கடிகாரம்கூட சுற்றுகிறது 

இறுகிய நிலையில்

 கனவுகளோடும் கணினியோடும் 

கரைகிறது என் நாட்கள் ! 


விட்டுச் சென்ற உன் வாசனை திரவியம் 

அதுவும் தரவில்லை உன் வாசம் ! 


கழட்டிபோட்ட உன் சட்டை 

படித்து பாதி மடித்த செய்தித்தாள்  


அழகான நம் இல்லம் 

இப்போது அருங்காட்சியகமாய் !!!!!


Saturday, 15 June 2013

உன் கோப தருணங்களில் !





தூக்கி எறியப்பட்ட  
பூனைக்குட்டியாய் 
நான் ! 

தூக்கிபோட்ட
குழந்தையாய்   
 நீ ! 

Monday, 10 June 2013

பிரிவு



அப்படி ஒன்றும் பெரியதல்ல

ஆனாலும்

வலித்தது

உனக்கும் எனக்குமான

இடைவெளி !