Sunday, 25 August 2013

அழகாய் கலையும்

தலைமுடியும்

அதை கோதிவிடும் 

விரல்களும் 

சாய்த்துவிடும் கண்களும் 

சந்துப்பல் சிரிப்பும் 

மூக்கின்மேல் முத்தமிடும் 

முத்தான மச்சமும் ! 

மார்பின் மத்தியில் 

பூத்திருக்கும் வேர்வைபூக்களும் !  

மோக முனகலும் 

முத்த தீர்த்தமும் !

உன் பிரியம் சொல்ல

பெரிதாய் இல்லை

வார்த்தைகள் !  

வானம் விரித்து 

சூரியனைத் தொட்டு 

எழுதினாலும் 

போதாதே பக்கங்கள் 

உன்னை பற்றி எழுதிட ! 

பஞ்சுமெத்தையில் படுத்தாலும் 

பக்கம் நீ இல்லையென்றால் 

உறக்கம் கூட இரக்கம் 

காட்டுவதில்லை ! 

காதலுடன் காத்திருக்கிறேன் 

கண்ணாளனே 

உன்  வரவிற்காக !