உள்ளக்கடல் உடைப்பெடுத்து ஓடிவர !
கண்பார்வை கத்தி கொண்டு கிழிக்க !
ஆற்றிலிட்ட கல்லுக்கு சிதறும் பறவைகளென
ரத்தமெல்லாம் புதுசத்ததுடன் !
கைகோர்த்து மடிசாய்ந்து சண்டையிட்டு
என்றோ வாழ்ந்த ஞாபகம்
எனக்குள் வந்திட !
கைபேசியில் கதைத்துக்கொண்டே
நீ சிரித்த நம் சந்திப்பின் முதல்கணம் !
முளைத்துவிட்டது காதல் ...!