Monday, 26 August 2013

இதை தான் காதல் என்று சொல்வார்களோ ?

அப்படி ஒன்றும்

அழகன் இல்லை

எத்தனை முறை

பார்த்தாலும்

சலிக்கவில்லை !

கன்னக்குழியில்

காணாமல்

போனேனோ ?

வண்ணமில்லா  வானவில்

மீசைக்குள் மறைந்து தான்

போனேனோ ?

மனம் மட்டும்

எப்போதும் மயக்க நிலையில் !