Thursday, 29 August 2013

கலவியற்ற காதல்

அழகழிந்து போன

அறுபதுகளில்

ஊடலிலும் கூடலிலும்

ஓடிச்சென்ற நாட்களை

நினைவுகூர்ந்து

ஊரடங்கினாலும் உரையாடல்

அடங்காமல்

உடல்தாகம் தாண்டிய

உயிர்த்தாகம் உணர்ந்து

என் தோள்களைப்  பற்றிய

அவரது கைகளுடன்

காலம் கடந்ததால்

காகிதத்தில் எழுதாமல்

வரலாற்றில் எழுதிவிட்டு

செல்கிறேன்

கலவியற்ற எங்கள் காதலை..!